அந்த நாட்டின் கல்வியாளர்களுக்கு அதிரடியாக அனுமதி மறுத்த பிரித்தானியா: வெளிவரும் உண்மை பின்னணி
தேசிய பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு 2022ல் ஒருசில நாடுகளை சேர்ந்த கல்வியாளர்களை வெளிவிவகார அமைச்சகம் அதிக எண்ணிக்கையில் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா அனுமதி மறுப்பு
தேசிய பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வியாளர்களுக்கு பிரித்தானியா அனுமதி மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீனாவுடனான ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் மீதான மிகப்பெரிய அரசாங்க நடவடிக்கைகளுக்கு மத்தியில் கல்வியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
@alamy
2022ல் மட்டும் 1,104 விஞ்ஞானிகள் மற்றும் பலகலை மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 2020ல் இந்த எண்ணிக்கை 128 என இருந்தது, ஆனால் 2016ல் இந்த எண்ணிக்கை வெறும் 16 என்றே தெரிய வந்துள்ளது.
சீனாவுடனான ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் கடினமான நிலையிலேயே, கல்வியாளர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. மட்டுமின்றி, உளவுத்துறை அச்சுறுத்தல் தொடர்பான MI5-ன் எச்சரிக்கை, முதன்மையான ஆய்வகங்கள் திடீரென்று மூடப்படுவது உள்ளிட்ட பல காரணிகளை இந்த விவகாரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும், எந்த நாட்டின் மாணவர்கள் அல்லது விஞ்ஞானிகள் அதிக எண்ணிக்கையில் அனுமதி மறுக்கப்பட்டவர்கள் என்ற பட்டியலை வெளிவிவகார அமைச்சகம் வெளியிட மறுத்துள்ளது.
சீனத்து கல்வியாளர்கள்
ஆனால் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் இம்பீரியல் கல்லூரி உள்ளிட்ட முன்னணி பல்கலைக்கழகங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், சீனத்து விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களே பெரும்பாலானோர் என உறுதியாகியுள்ளது.
@alamy
இருப்பினும், கொள்கைகள் மாற்றப்பட்ட நிலையில் சிலருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது. ஆனால், அரசாங்கத்தின் இந்த கொள்கை காரணமாக வெளிநாட்டில் இருந்து சிறந்த திறமைசாலிகளை வேலைக்கு அமர்த்துவதில் பல்கலைக்கழகங்கள் திணறி வருவதாக முன்னணி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, 2022ல் மொத்தம் 50,000 பேர்கள் விண்ணப்பித்ததில் இருந்து 1,014 பேர்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.