மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு தடுப்பூசி - சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுப்பதற்கான தடுப்பூசியை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மாரடைப்பு
உலகளவில் இதய நோய் அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது. அமெரிக்க இதய சங்கத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இதய நோயால் இறப்பதாக கூறப்படுகிறது.
பக்கவாதம் மற்றும் இதயநோய் ஏற்படுவதற்கு, பெருந்தமனி தடிப்பு, அல்லது தமனிகளில் கொழுப்புத் தகடு குவிதல் ஆகியவை முக்கிய காரணமாக அமைகிறது.
தமனிகளில் பிளேக் படிவதன் மூலம் ஏற்படும் அடைப்பு காரணமாக, இரத்த ஓட்டம் தடைபட்டு, இரத்த உறைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
தற்போது இந்த அடைப்புகளை, ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டவுடன், ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட்களைப் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகள் மூலம் சிகிச்சையளிக்க முடியும்.
தடுப்பூசி
இந்நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் தமனிகளில் பிளேக் படிவதைத் தடுப்பதற்கான தடுப்பூசியை உருவாக்கியதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உள்ள நான்ஜிங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான நானோ தடுப்பூசியை தயாரித்து, அதை எலிகள் மீது சோதித்துள்ளனர். இதில் எதிர்பார்த்த முடிவு கிடைத்துள்ளது.
பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் முன்னேற்றத்தைத் தடுப்பது P210 என்னும் புரதம் ஆகும். இந்த தடுப்பூசி P210 ஆன்டிஜெனை நுண்ணிய இரும்பு ஆக்சைடு நானோ துகள்களுடன் பிணைப்பதன் மூலம் செயல்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |