இனி பெண்களுக்காக ரோபோவே குழந்தை பெற்றுக்கொடுக்கும் - ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்
நிறுவனம் ஒன்று கர்ப்ப கால ரோபோவை உருவாகும் ஆராய்ச்சியில் முதிர்ச்சி கட்டத்தை எட்டியதாக தெரிவித்துள்ளது.
கர்ப்ப கால ரோபோ
மருத்துவ உலகில் தொழில்நுட்பம் பல்வேறு தீர்வுகளை வழங்கியுள்ள நிலையிலும், குழந்தையின்மை இன்னும் பலருக்கும் பெரும் குறைபாடாக உள்ளது.
இந்நிலையில், சீனாவை தளமாக கொண்டு இயங்கி வரும் Kaiwa Technology என்ற நிறுவனம் அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிறுவனம், விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிஃபெங் தலைமையில் மனித வடிவிலான கர்ப்ப கால ரோபோவை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
கருத்தரித்தல் முதல் குழந்தை பிறப்பு வரை அனைத்து செயல் முறைகளையும் மேற்கொள்ளும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட உள்ளது.
பெண்ணின் கருப்பையை பிரதிபலிக்கும் வகையில், அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட செயற்கை கருப்பை ரோபோவின் வயிற்றில் உருவாக்கப்படும்.
வழக்கமான பிரசவத்தில் நஞ்சுக்கொடி குழந்தையை வளர்ப்பது போல், இந்த செயற்கை கருப்பையில் இணைக்கப்பட்ட குழாய் வழியாக ஊட்டச்சத்து வழங்கப்படும்.
என்ன விலை?
2026 ஆம் ஆண்டுக்குள் இதன் முன்மாதிரியை உருவாக்க திட்டமிட்டுள்ள நிறுவனம், இந்த ரோபோவை உருவாக்க 1 லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.12.17 லட்சம்) ஆகும் என மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜாங் கிஃபெங், "இந்த செயற்கை தொழில்நுட்பம் ஏற்கனவே முதிர்ச்சியடைந்து விட்டது. தற்போது அதை ரோபோவின் வயிற்றில் பொறுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு மனிதரும், ரோபோவும் கர்ப்பத்தை அடைய தொடர்பு கொள்ள முடியும். இது கரு உள்ளே வளர அனுமதிக்கிறது." என கூறினார்.
இவ்வாறு ரோபோ மூலம் உருவாகும் குழந்தைகள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்தும் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த கர்ப்ப கால ரோபோ மூலம் குழந்தை பெறுவது சாத்தியமானால், குழந்தையின்மை பிரச்சினையில் இது பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இயற்கை முறை பிரசவத்தில் குழந்தை பெற விரும்பாத பெண்களுக்கு இது ஒரு மாற்றாக அமையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |