மேசையில் பணத்தை கொட்டி அள்ளிக்கொள்ள சொன்ன முதலாளி - இத்தனை கோடி போனஸா?
சீனாவில் இயங்கி வரும் கிரேன் தயாரிப்பு நிறுவனமான ஹெனான் மைனிங் கிரேன் கோ(henan mine crane co) என்ற நிறுவனம், தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பணம் எண்ணும் போட்டி மூலம் பல கோடி போனஸ்
இந்த நிறுவனம் 2025 நிதியாண்டில், 267 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.351 கோடி) லாபத்தை பதிவு செய்துள்ளது. அதில் மூன்றில் இரண்டு பங்கு தொகை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கப்பட்டுள்ளது.

அதாவது மொத்தமாக 180 மில்லியன் சீன யுவான்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.236 கோடி) ஊழியர்களுக்கு போனஸாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 13 ஆம் திகதி நடந்த நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் 60 மில்லியன் சீன யுவான்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.79 கோடி) ஊழியர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, 800 மேடைகளில் பல கோடி சீன யுவான் நோட்டுகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 15 நிமிடங்களில் ஊழியர்கள் எண்ணிக்கொள்ளும் பணத்தை போனஸாக எடுத்து செல்லலாம் என அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வில், நிறுவனத்தின் 7,000 ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இதில் ஊழியர் ஒருவர், 15 நிமிடங்களில் 12 லட்சம் யுவான்(ரூ.1.57 கோடி) பணத்தை எண்ணி அதனை போனஸ் ஆக பெற்றுள்ளார். இவ்வாறாக, 60 மில்லியன் சீன யுவான்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.79 கோடி) பணத்தை இந்த போட்டியின் மூலம் போனஸாக ஊழியர்கள் பெற்றுள்ளனர்.
Henan Mining Crane Group distributed stacks of banknotes on stage as part of year-end bonuses, Yes, employees literally counted and kept the cash.
— China Perspective (@China_Fact) February 14, 2026
“Boss who loves giving money” trends again.pic.twitter.com/SDqPBzBskG
மீதமுள்ள தொகை, ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், எங்கள் நிறுவன உரிமையாளர் கண்ணில் படும் வரை இந்த வீடியோவை பகிருங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனம் 2023 ஆம் ஆண்டு முதலே இவ்வாறாக பணத்தை எண்ணும் போட்டி நடத்தி ஊழியர்களுக்கு பல கோடிகளை போனஸாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டும் பணம் எண்ணும் போட்டி மூலம் சுமார் 70 கோடி ரூபாய் போனஸாக வழங்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |