தங்கத்தை பெருமளவு வாங்கிக் குவிக்கும் சீனா... வெளியான காரணம்
சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து 7வது மாதமாக ஆகஸ்டிலும் பெருமளவு தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கையிருப்பு 5,000 டன்
வெளிவரும் தரவுகளின் அடிப்படையில், சீன அரசாங்கத்திடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு 253.8 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 21 டன் தங்கத்தை சீனாவின் மத்திய வங்கி வாங்கியுள்ளது.
2024ல் மொத்தமாக 44 டன் மட்டுமே வாங்கப்பட்ட நிலையில், 2023ல் சீன அரசாங்கம் 225 டன் தங்கம் வாங்கியிருந்தது. மேலும் மொத்த கையிருப்பு 5,000 டன் என அதிகரிக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற விரும்பினால், அது 8,000 டன்களுக்கு மேல் தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்றே கூறப்படுகிறது.
ஆனால், சீனாவிடம் தற்போது 2,300.4 டன் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது. கடந்த 2009ல் சீனா குறைந்தபட்சம் 5,000 டன் தங்கத்தையாவது கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் சீன தங்க சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் கூறியிருந்தார்.
இந்த இலக்கை சீனா எட்டினால், உலகில் அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் இரண்டாவது நாடாக அறியப்படும். முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா மொத்தம் 8,133.5 டன் தங்கம் கையிருப்பு வைத்துள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில்
கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காவிடம் இருக்கும் தங்கத்தின் கையிருப்பு பெருமளவு மாற்றம் எதையும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜேர்மனியிடம் 3,350 டன் தங்கம் உள்ளது. இத்தாலி 2,452 டன், நாட்டில் தங்கச் சுரங்கம் என எதுவும் இல்லாத பிரான்சிடம் 2,437 டன்,
ரஷ்யா 2,330 டன், சீனா 2,300.4 டன், சுவிட்சர்லாந்து 1,040 டன், இந்தியா 880 டன், ஜப்பான் 846 டன், துருக்கி 637 டன், நெதர்லாந்து 613 டன், போலந்து 515 டன் என தங்கம் கையிருப்பு வைத்துள்ளனர்.
மேலும், 2023 முதல் சீனாவும் போலந்தும் மிக அதிகமாக தங்கம் வாங்கிக் குவித்து வருகின்றனர். போலந்து மட்டும் 2023 முதல் இதுவரை 287 டன் தங்கம் வாங்கிக் குவித்துள்ளது.
மிக விரைவில், அடுத்த பத்தாண்டுகளில் சீனா 8,000 டன் தங்கம் என்ற இல்லை எளிதாக தாண்டும் என்றே ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
சீனாவின் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி இருப்பு 3.6 டிரில்லியன் டொலர்களாக உள்ளது, இதில் தங்கம் சுமார் 7% பங்களிக்கிறது, இது உலக சராசரியான 22 சதவீதத்தை விட மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |