சீனாவில் மழலையர் பள்ளியில் வன்முறை தாக்குதல்: 6 பேர் படுகொலை! குழந்தைகள் குறித்து அதிகரிக்கும் கவலை
சீனாவில் உள்ள மழலையர் பள்ளியில் நடந்த தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மழலையர் பள்ளியில் தாக்குதல்
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் திங்கட்கிழமை மர்ம நபர் ஒருவர் புகுந்து தாக்குதல் நடத்தினார்.
இதில் 6 பேர் வரை கொல்லப்பட்ட இருப்பதாகவும், ஒருவர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த கவலையை அதிகரிக்க வைத்துள்ளது.
சந்தேக நபர் கைது
இந்நிலையில் சீனாவின் தென் மாகாணத்தில் உள்ள லியான்ஜியாங் கவுண்டியில் அரங்கேற்றிய இந்த கத்தி குத்து தாக்குதலில் சந்தேகத்திற்குரிய 25 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வூ என்ற குடும்ப பெயருடன் லியான்ஜியாங் பகுதியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சில உள்ளூர் ஊடகங்களின் தகவல் படி பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A 25-year-old man who murdered six people and injured another one with a knife at a kindergarten in Lianjiang, South China’s Guangdong Province on Monday morning has been arrested by police. The case is under further investigation, local police said in a statement.… pic.twitter.com/bzdFIbzFyx
— Global Times (@globaltimesnews) July 10, 2023
சீனாவில் கடுமையான துப்பாக்கி சட்டம் மற்றும் தீவிரமான பாதுகாப்பு இருப்பதால் இது போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறுவது அரிதானதாகவே உள்ளது, இருப்பினும் கடந்த சில வருடங்களாக பள்ளிகளில் நடைபெற்று வரும் கத்திக்குத்து சம்பவங்கள் பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |