நிச்சயம் நீ மறுமணம் செய்து கொள்! சிறைக்கு செல்வதற்கு முன் மனைவியிடம் கெஞ்சிய கணவன்
சீனாவில் 30 வருடங்களுக்கு முன்பு செய்த கொலை குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர் தன்னுடைய மனைவியிடம் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என கதறி அழுது வேண்டுகோள் வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
30 வருடங்களுக்கு முன்பு செய்த கொலை
சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 3 நபர்கள் இணைந்து 1993ம் ஆண்டு இளைஞர் ஒருவரை அடித்து குத்திக் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு குற்றவாளிகள் அப்போதே கைது செய்யப்பட்ட நிலையில், ஜோவ் என்ற நபர் மட்டும் தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.
கிட்டத்தட்ட 30 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் கடந்த மாத இறுதியில் கொலை குற்றவாளியான ஜோவ், சீனாவின் தெற்கு பகுதி நகரான குவாங்சோ-வில் வாழ்ந்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்தனர்.
மனைவியிடம் வேண்டுகோள்
இந்நிலையில் ஜோவ் கைது செய்யப்பட்ட போது, அவருடைய மனைவியிடம் ஜோவ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரையும் உருக வைத்துள்ளது.
அதில் தன்னுடைய மனைவியை கட்டி பிடித்து அழும் ஜோவ்( Zhou), மனைவியிடம் நீ எனக்காக காத்து இருக்காதே, நீ மற்றொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திரும்ப திரும்ப வேண்டுகோள் வைக்கிறார்.
அத்துடன் அவரது அண்ணியிடம் எங்கள் இருவருக்கும் இடையிலான விவாகரத்து ஒப்பந்தம் முடிந்து விட்டது, அதில் உங்களுடைய சகோதரியை கையெழுத்து இட சொல்லிவிட்டு அவளை மற்றொரு திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துங்கள், இனி அவள் எனக்காக காத்திருக்க வேண்டாம், என்னென்றால் நான் சிறையில் இருந்து வரமாட்டேன் என அழுகையுடன் தெரிவிக்கிறார்.
இதற்கு உடனடியாக ஜோவ் மனைவி “உனக்கு நான் வேண்டாமா? இதனை நான் எப்போது ஏற்றுக்கொள்ள மாட்டேன், என்று கதறி அழுகிறார். அதற்கு கணவர் ஜோவ் எனக்காக காத்திருக்காதே என பதிலளிக்க அவரது மனைவி உடனடியாக ஜோவ்-வின் வாயை கையை வைத்து அடைகிறாள்.
கணவன் மற்றும் மனைவிக்கு நடுவே நடக்கும் இந்த பாச போராட்டத்தின் வீடியோ காட்சிகள் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
குற்றவாளியான ஜோவ், இத்தனை ஆண்டுகளாக எனது பெற்றோரை பார்க்கவில்லை, அவர்களிடம் எனது குழந்தையையும் காட்டவில்லை, நான் சிறுவயதில் செய்வதறியாமல் தவறு செய்துவிட்டேன், அவரை அடித்தே கொன்று இருக்க கூடாது என ஜோவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |