இனப்படுகொலை விவகாரம்..! கனடாவின் செயலால் கடும் கோபமடைந்த சீனா: இரு நாடுகளிடையேயான உறவில் அதிகரிக்கும் விரிசல்
கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, Uyghur சிறுபான்மையினரை சீனா நடத்தும் விதம் இனப்படுகொலை என்று கனடா பாராளுமன்றத்தில் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘இனப்படுகொலை’ தொடர்ந்தால் 2022 ஒலிம்பிக்கை சீனாவிலிருந்து மாற்றுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு கனடா அழைப்பு விடுத்து ஒரு திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் கனேடிய நாடாளுமன்றத்தில் 266-0 என எந்தவித எதிர்ப்புமின்றி நிறைவேற்றப்பட்டது, எனினும், பிரதமர் ஜஸ்டிஸ் ட்ரூடோ மற்றும் அவரது அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்தனர்.
முன்னதாக, ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு எதிராக ட்ரூடோ எச்சரித்தார், இது கடுமையான சர்வதேச வழிகாட்டுதல்களால் வழிநடத்தப்பட்ட ஒரு சொல் என்றும் அதை தவறாகப் பயன்படுத்துவது நம்மை பலவீனப்படுத்தும் என்றும் கூறினார்.
மேலும், Xinjiang-ல் நடத்தப்படுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலையின் வரையறையை பூர்த்திசெய்கிறதா என்பது குறித்து சர்வதேச அளவில் கலந்துரையாடல் தேவை என்று பிரதமர் ட்ரூடோ கூறினார்.
இந்நிலையில், சீன Uyghur-ஐ நடத்தும் விதம் இனப்படுகொலை என கனேடிய பாராளுமன்றம் முன்னதாக நிறைவேற்றிய தீர்மானத்தை சீனா கண்டிக்கிறது மற்றும் நிராகரிக்கிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அமைச்சகம் கனேடிய தரப்பில் ‘கடுமையான கண்டனங்களை’ பதிவு செய்துள்ளது என்றும் கூறினார்.