அவுஸ்திரேலியாவில் 1,265 பேருக்கு..தவறான மொடல் கார் விற்பனை: ஒப்புக்கொண்ட சீன நிறுவனம்
அவுஸ்திரேலியாவில் 1,200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தவறான கார் மொடலை விற்றதாக சீனாவின் BYD ஒப்புக்கொண்டுள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனம்
சீனாவைச் சேர்ந்த மின்சார மற்றும் ஹைப்ரிட் கார் தயாரிப்பு நிறுவனம் BYD. இந்நிறுவனம் அவுஸ்திரேலியாவில் 1,265 கார்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
ஆனால், 2026-ஆம் ஆண்டு மொடல் காருக்கு பதிலாக, 2025-ஆம் ஆண்டு மொடல் கார்களையே விற்றுள்ளது.
இதனை குறித்த 1,265 உரிமையாளர்களிடம் அந்நிறுவனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த பெரும் குளறுபடி வெளிச்சத்திற்கு தெரிய வந்துள்ளது.
தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடாக வெறும் 1,100 டொலர்கள் மட்டுமே வழங்க முன்மொழியப்பட்டது.
என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என்று ABC செய்தி வெளியிட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |