ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் முதல்முறையாக சரிவு: வெளிப்படையாக கூறிய ஆசிய நாடு
ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் முதல் ஆண்டு சரிவை சீனா பதிவு செய்துள்ளது.
வர்த்தகம்
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், கடந்த 4 ஆண்டுகளாக வளர்ச்சியில் இருந்தது.
Photo: Sergei Bobylyov/AFP via Getty Images
ஆனால் தற்போது சீனா 2020க்குப் பிறகு, ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் முதல் ஆண்டு சரிவை பதிவு செய்துள்ளது.
ரஷ்யாவில் சீன கார் இறக்குமதிக்கான தேவை குறைந்ததாலும், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயின் மதிப்பு சரிந்ததாலும் வர்த்தகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சரிவு
அதாவது, 2025யில் ரஷ்யா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் பரிமாற்றம், 5 ஆண்டுகளில் முதல் முறையாக சுருங்கியுள்ளது என, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், சீனாவின் பொது சுங்க நிர்வாகத்தின்படி, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 228.1 பில்லியன் டொலராக இருந்தது.
இது 2024யில் பதிவான சாதனை அளவான 244.8 பில்லியன் டொலரில் இருந்து 6.9 சதவீதம் சரிவைக் குறிக்கிறது.
Photo: Reuters/Maxim Shemetov
இதன்மூலம் இருதரப்பு வர்த்தகத்தில் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக நீடித்த வளர்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. எண்ணெய் விலை சரிவே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
உலகளவில், சீனாவின் பொது சுங்க நிர்வாகம் 2025ஆம் ஆண்டில் 6.48 ட்ரில்லியன் டொலர் என்ற சாதனை அளவிலான வர்த்தகத்தைப் பதிவு செய்தது, இது முந்தைய ஆண்டை விட 3.8 சதவீதம் அதிகரிப்பாகும்.
Photo: SpokespersonCHN, X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |