கனேடிய நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த சீனா
உய்குர் மற்றும் திபெத் தொடர்பான மனித உரிமைப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறிப்பிட்டு கனேடிய நிறுவனங்கள் மற்றும் 20 பேர்கள் மீது சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
பரவலாக துஷ்பிரயோகம்
சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக குறிப்பிடும் சீனா, சொத்துக்கள் முடக்கம், தடை உள்ளிட்டவையை அறிவித்துள்ளது. இதில் கனடாவில் செயல்படும் உய்குர் உரிமைகளுக்காக வாதிடும் அமைப்பு மற்றும் கனடா-திபெத் கமிட்டி ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் சின்ஜியாங்கின் மேற்குப் பகுதியில் சுமார் 10 மில்லியன் மக்கள் வாழும் இஸ்லாமிய சிறுபான்மையினரான உய்குர்களை பரவலாக துஷ்பிரயோகம் செய்வதாக சீனா நிர்வாகம் மீது உரிமைக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் முகாம்களில் உய்குர் மக்களை கட்டாய உழைப்புக்கு பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா மொத்தமாக மறுத்து வருகிறது.
முன்னர், நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்திலிருந்து உண்மையான விடுதலை என்று குறிப்பிட்டு 1950 ல் திபெத்தின் கட்டுப்பாட்டை சீனா கைப்பற்றியது. ஆனால் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த முடிவை கண்டித்து வருகின்றனர்.
சொத்துக்கள் முடக்கம்
மட்டுமின்றி, திபெத்திய பகுதிகளில் சீனாவின் அடக்குமுறை ஆட்சி என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனிடையே தடை விதிக்கப்பட்ட இரு நிறுவனங்கள் தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ள தகவலில்,
சீனாவின் எல்லைக்குள் அவர்களின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் பிற வகை சொத்துக்களை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, சீனாவில் உய்குர் நிறுவனத்தில் 15 பேர் மற்றும் திபெத் கமிட்டியில் உள்ள 5 பேரின் சொத்துக்களையும் முடக்குவதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த 20 பேர்களும் ஹொங்ஹொங் மற்றும் மக்காவ் உள்ளிட்ட சீனாவிற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுது. இந்த விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்கும் பொருட்டு, சீனாவில் உள்ள கனேடிய தூதரகத்தைத் தொடர்புகொண்ட நிலையில், பதிலளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Uyghur Rights Advocacy Project, Canada-Tibet Committee