பழிவாங்கும் ட்ரம்ப்... அரியவகை கனிமங்கள், உரம் தொடர்பில் இந்தியாவிற்கு உறுதி அளித்த சீனா
இந்தியா - சீனா இடையே இருதரப்பு நல்லுறவு மேம்படுவதன் அறிகுறியாக உரங்கள், அரிய மண் தாதுக்கள் உட்பட மிகவும் தேவையான விநியோகத்தை மீண்டும் தொடங்க சீனா முடிவு செய்துள்ளது.
ட்ரம்ப் கொள்கைகள்
கடந்த மாதம் சீனாவிற்கு விஜயம் செய்தபோது, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியிடம், யூரியா, NPK மற்றும் DAP, அரிய மண் தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் ஆகியவற்றின் விநியோகம் குறித்த பிரச்சினையை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எழுப்பியிருந்தார்.
மட்டுமின்றி, தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் காரணமாக சீனாவும் இந்தியாவும் ஒருங்கிணைய வேண்டிய கட்டாயம் இருப்பதையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளும் முடிவுகளும் இந்தியாவையும் சீனாவையும் குறிவைக்கும் வகையில் இருப்பதாகவே பொது கருத்தாக உள்ளது. இந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்திய இறக்குமதிகளுக்கு தடை விதித்திருந்த சீனா, உரங்கள், சுரங்கப்பாதை இயந்திரங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களை வழங்க ஒப்புக்கொண்டது ஒரு பெரிய முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.
எந்த மாற்றமும் இல்லை
விவசாயத்திற்காக கிட்டத்தட்ட 30 சதவீத உரங்களையும், வாகன பாகங்களுக்கான அரிய மண் தாதுக்களையும், சாலை மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தையும் சீனா வழங்குகிறது.
இதனிடையே, தைவான் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் உலக நாடுகள் போலவே இந்தியாவும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளுக்கு தூதரக இருப்பைப் பராமரித்து வருவதாகவும் சீனாவிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |