சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்குமா?: ஜேர்மன் சேன்ஸலர் தெரிவித்துள்ள முக்கிய தகவல்...
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்கலாம் என்பது குறித்து வெளியான செய்திகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின.
சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்குமானால், அதனால் போரின் போக்கே மாறக்கூடும் என்ற அச்சம் உருவானது.
ஜேர்மன் சேன்ஸலர் தெரிவித்துள்ள தகவல்
இந்நிலையில், சீனா உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளதாக ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் சீனாவிடமிருந்து ஜேர்மனிக்கு இருதரப்பு உறுதிகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் தெரிவித்துள்ள தகவல்
ஜேர்மன் சேன்ஸலரும், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவரான உர்சுலா வான் டெர் லேயனும் ஊடகவியலாளர் சதிப்பு ஒன்றில் பேசியபோது ஷோல்ஸ் இந்த தகவலை தெரிவித்தார்.
அப்போது பேசிய உர்சுலாவும், சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளது குறித்து தங்களுக்கும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Carsten Koall/Getty Images

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.