சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை துரிதப்படுத்தும் சுவிட்சர்லாந்து-சீனா
சீனா மற்றும் சுவிட்சர்லாந்து, தங்களது இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement - FTA) மேம்படுத்தும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உறுதி தெரிவித்துள்ளன.
இது குறித்து பீஜிங்கில் பேசிய சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ், "இந்த ஒப்பந்தம் நன்கு செயல்படுகிறது. அதனால் இதை விரைவில் முடிக்க விரும்புகிறோம்," என்று கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து 2013-ஆம் ஆண்டு சீனாவுடன் FTA ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் ஐரோப்பிய நாடாகும்.
அதன் பின்னர், சுவிஸ் ஏற்றுமதி இரட்டிப்பாக்க வளர்ந்தது, மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி 60% உயர்ந்தது எனவும் அவர் கூறினார்.
பத்தாண்டுகளில் உலகம் பல மாற்றங்களை கண்டுள்ளதால், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகள் இந்த புதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவுள்ளன.
“ஸ்மார்ட்போன்களில் செயலிகளைப் போல், வர்த்தக ஒப்பந்தங்களும் காலத்திற்கேற்ப புதுப்பிக்கப்பட வேண்டும்,” என காசிஸ் கூறியுள்ளார்.
சீனாவே ஆசியாவில் சுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான வர்த்தகக் கூட்டாளர். 1965-ஆம் ஆண்டு ABB நிறுவனம் தனது முதல் உரிம ஒப்பந்தத்தை சீனாவுடன் மேற்கொண்டது, மேலும் 1980-இல் Schindler நிறுவனம் முதல் வெளிநாட்டு தொழில்துறை கூட்டுத் தொழிற்சாலையை நிறுவியது.
"நாங்கள் ஒரு பாரிய சந்தையும் ஒரு சிறிய சந்தையும் இணைந்த கூட்டணி. ஆனால் வணிக உறவுகள் மூலம் எப்போதும் முன்னேறும் சக்தி இருநாட்களுக்கும் உள்ளது," என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China Switzerland Free Trade Agreement 2025, China Switzerland FTA upgrade, Switzerland trade deal with China, AI in international trade agreements, Digital trade agreement China Switzerland, China Europe trade 2025, Ignazio Cassis China visit, China Switzerland economic relations, Free Trade Agreement news 2025