கோவிட் கட்டுப்பாடுகள் கைவிட்ட பிறகு…குறுகிய கால விசாக்களுக்கு சீனா ஒப்புதல்
தென் கொரிய மக்களுக்கான குறுகிய கால விசா வழங்கலை சீனா மீண்டும் தொடங்கும் என சியோலில் உள்ள சீன தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
குறுகிய கால விசா
சியோல் மற்றும் டோக்கியா சீன பயணிகள் மீது கோவிட் நடவடிக்கைகளை விதித்த பின்னர், சீன கடந்த மாதம் தென் கொரியா மற்றும் ஜப்பான் குடிமக்களுக்கான விசா இல்லாத போக்குவரத்து சேவையை ரத்து செய்து இருந்தது.
இந்நிலையில் தென் கொரிய குடிமக்களுக்கான குறுகிய கால விசாக்களை பிப்ரவரி 18 ஆம் திகதி சீனா மீண்டும் தொடங்கும் என சியோலில் உள்ள சீன தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
Reuters
சீன மக்கள் மீதான கோவிட் பயணக் கட்டுப்பாடுகளை கடந்த வாரம் தென் கொரியா முடிவுக்கு கொண்டு வர முடிவு எடுத்ததை தொடர்ந்து, சீனாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சீன தூதரக அறிக்கை
இது தொடர்பாக சீன தூதரகம் அதன் அதிகாரப்பூர்வ WeChat கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை முதல் சியோலில் உள்ள சீனத் தூதரகம் மற்றும் பிற துணைத் தூதரகங்கள் மூலம் தென் கொரிய குடிமக்களுக்கு வணிகம், போக்குவரத்து மற்றும் பிற தனியார் விவகாரங்களுக்காக சீனாவுக்குச் செல்வதற்கான குறுகிய கால விசாக்கள் வழங்கல் மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளது.
அனைத்து வருகையாளர்களுக்கும் கட்டாய தனிமைப்படுத்தல் போன்ற முக்கியமான கோவிட் கொள்கைகளை அரசாங்கம் திடீரென கைவிட்ட பிறகு, வெளியேறும் பயணங்களில் சீனா ஏற்றம் கண்டுள்ளது.