சீனாவின் ரகசிய நகர்வு... தங்கத்தை வாங்கிக் குவிப்பதன் அதிர்ச்சி பின்னணி
ஈரான் போர் தொடர்பில் சர்வதேச அளவில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், சீனா அதி தீவிரமாக தங்கத்தை வாங்கிக் குவித்து வருகிறது.
தங்கத்தை சேமித்து
ரஷ்யா உட்பட உலக நாடுகள் பல தங்களிடம் உள்ள தங்க கையிருப்புகளை விற்பனை செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் சீனா மட்டும் தங்கத்தை வாங்கிக் குவிப்பது, தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யும் மிகப்பெரிய சக்தியாக மாறப்போகிறது என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆப் சீனா கடந்த 16 மாதங்களாக இடைவிடாமல் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. கடந்த ஆண்டு தங்கம் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது சீனாவின் தொடர்ச்சியாகன இந்த நடவடிக்கை என்றே கூறுகின்றனர்.
உலக நாடுகள் பல தங்கள் தங்க கையிருப்புகளை குறைத்து டொலராக மாற்றி வரும் நிலையில், சீனா மட்டும் தொடர்ந்து தங்கத்தை சேமித்து வருவது சந்தையில் தனித்துவமான நிலையை உருவாக்கியுள்ளது.
உலகளவில் அதிக தங்க கையிருப்பு வைத்திருக்கும் நாடாக விளங்கும் அமெரிக்கா சுமார் 8000 டன் தங்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு பிறகு சீனா சுமார் 2300 டன் தங்கத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்த அளவானது அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் இருந்தாலும், உண்மையான கையிருப்பு இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றே சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அதாவது சீனாவின் மத்திய வங்கி, தற்போதைய சந்தை விலையில் சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள, ஏறத்தாழ 62,000 மெட்ரிக் டன் தங்கத்தைக் குவித்து வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சீனாவின் இந்த தங்க வேட்டை வேகமெடுக்கத் தொடங்கியது, மாதாந்திர கொள்முதல் சராசரியாக 380 டன்களாக இருந்தது.

சீன வாங்குவோர், புதிதாக வெட்டி எடுக்கப்பட்ட தங்கம் மற்றும் வளரும் நாடுகளின் மத்திய வங்கிகளிடமிருந்து ஏற்கனவே உள்ள கையிருப்பு ஆகிய இரண்டையும் குறிவைத்தனர்.
சீனாவின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 3 டிரில்லியன் டொலர் அளவில் உள்ளது. இதில் வெறும் 210 பில்லியன் டொலர் மட்டுமே தங்கமாக உள்ளது. அதாவது, மொத்த கையிருப்பில் சுமார் 7 சதவீதம் மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
தங்கத்தின் தேவை
மீதமுள்ள 93 சதவீதம் இன்னும் தங்கமாக மாற்றப்படாமல் உள்ளது. ஆனால், சீனா தனது கையிருப்பில் ஒரு சிறிய பகுதியையே தங்கமாக மாற்றினாலும் கூட, உலக சந்தையில் தங்கத்தின் தேவை திடீரென அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சீனா தற்போது மேற்கொண்டு வரும் இன்னொரு முக்கிய நடவடிக்கை அமெரிக்க அரசின் பத்திரங்களை விற்பனை செய்வதாகும். ஏறக்குறைய 700 பில்லியன் டொலர் அளவுக்கு அமெரிக்க பத்திரங்களை வைத்திருந்த சீனா, அதை மெதுவாக சந்தையில் வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது.
இது டொலர் அடிப்படையிலான சொத்துகளில் இருந்து வெளியேறி, தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளுக்கு மாறும் முயற்சியை சீனா கையில் எடுத்துள்ளது.

சீனா தனது கையில் இருக்கும் 700 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பத்திரத்தை விற்று தங்கம் வாங்க பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்றே கணிக்கின்றனர்.
700 பில்லியன் டொலர் அளவுக்கு தங்கம் வாங்கப்பட்டால், தற்போதைய விலையை விட 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை தங்கம் விலை உயரக்கூடும்.
ஏற்கனவே அமெரிக்கா தன்னிடம் இருக்கும் தங்கத்தை டிஜிட்டல் டோக்கனாக மாற்றி கிரிப்டோ சந்தையில் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தங்கம் மீதான வர்த்தகம் அதிகரித்து விலையும் அதிகரிக்கும்.
அமெரிக்காவும் தன்னிடம் இருக்கும் தங்கத்தை வைத்து தான் கடன் சுமையை குறைக்க திட்டமிட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |