டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பைத் தொடர்ந்து.,அவுஸ்திரேலியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்ததைத் தொடர்ந்து சீனா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ட்ரம்ப் ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இடையிலான சந்திப்பு நடந்தது.
அப்போது அவுஸ்திரேலியாவிற்கு 3 வெர்ஜீனியா வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை விரைவாக வழங்குவதை ட்ரம்ப் பகிரங்கமாக ஆதரித்தார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவுடன் ஒரு முக்கிய கனிம ஒப்பந்தத்தையும் ட்ரம்ப் அறிவித்தார். அல்பானீஸ் அரசாங்கத்திற்கு இந்த சந்திப்பு ஒரு முக்கிய இராஜதந்திர தருணத்தைக் குறித்தது.
எச்சரிக்கை
இந்த நிலையில், இரு நாடுகளின் நட்பு ரீதியான சந்திப்பு சீனாவுக்கு கோபத்தைத் தூண்டியுள்ளது. ஏனெனில், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் (Guo Jiakun) எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர், நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை கண்டித்து, அது பிராந்திய பதட்டங்களைத் தூண்டும் என்றும், புதிய ஆயுதப் போட்டியைத் தூண்டும் என்றார்.
மேலும், "அணுசக்தி பரவல் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் ஆயுதப் போட்டியை அதிகரிக்கும் எதையும் நாங்கள் எதிர்க்கிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |