கனடாவுக்கு சீனா எச்சரிக்கை: கனடா கொடுத்துள்ள பதிலடி
தைவானுக்குச் செல்ல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளார்கள்.
தைவானுக்குச் சென்றால் பயங்கர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீனா கனடாவை எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிவாக்கில், வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் தைவானுக்குச் செல்ல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளார்கள்.
ஆனால், தைவானுக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல திட்டமிட்டுள்ள விடயம் சீனாவை எரிச்சலூட்டியுள்ளது.
எனவே, தைவான் விடயத்தில் தலையிட்டால், சீனா கனடா மீது பயங்கர நடவடிக்கைகள் எடுக்கும் என சீன தரப்பு எச்சரித்துள்ளது.
சீனாவின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள கனடா, சீனா கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தைவான் பயணத்தை இராணுவ அல்லது பொருளாதார ரீதியிலான வம்புச்சண்டை இழுப்பதற்கு காரணமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது.
சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி, வெளிநாட்டவர்கள் அங்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.