திணறடிக்கும் ஆற்று வெள்ளத்திலும்...சீன பள்ளி மாணவர்களின் துணிச்சல் செயல்!
சீனாவில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கொட்டி தீர்த்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளப்பெருக்கிலும் மாணவர்கள் நுழைவு தேர்விற்கு படகில் சென்று இருப்பது சீன ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சீனாவின் குய்ஜியாங் ஆற்றங்கரையை சுற்றி உள்ள நகரங்களில் இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, இதனால் ஆற்றங்கரையை ஓட்டி உள்ள பெரும்பாலான நகரங்கள் முழுவதுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
இந்த கனமழை மற்றும் பயங்கரமான வெள்ளப்பெருக்கு காரணமாக பெரும்பாலான வீடுகள் மட்டும் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டதுடன் மட்டுமில்லாமல் 2,00,000 பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
FLOOD ALERT - A fire truck was swept away by flood waters in China.#naturaldisaster #chinaregimecrisis pic.twitter.com/nzx8gicuOI
— Himalaya News Voices ? (@himalayavoices) June 19, 2022
இத்தகைய கனமழையை தெற்கு சீனாவில் 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்படுவதால், பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 4,80,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், கனமழையால் சீனாவின் வுஜோ நகரம் முழுவதும் வெள்ளத்தில் சூழ்ந்து இருக்கும் நிலையில், அப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கான நுழைவு தேர்வை எழுத உள்ளூர் அரசாங்கம் படகு சேவையை ஏற்பாடு செய்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: காரில் ஏறிய மூத்த ரஷ்ய அதிகாரியை: குண்டு வைத்து தீர்த்துக் கட்டிய எதிர்பாளர்கள்!
இதில் உயிர்காக்கும் உடைகளை அணிந்து மாணவர்கள் படகில் பயணித்தது தொடர்பான காட்சிகள் சீன ஊடகத்தில் வெளியாகி பெரும் கவலையை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.