கனடாவை பழிக்கு பழி வாங்க சீனா செய்து வரும் செயல்! ரகசிய அறையில் நடக்கும் விசாரணை: ஜஸ்ட்டின் கண்டனம்
சீனாவில் உளவு பார்த்ததாக கூறி, குற்றம் சாட்டப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டாவது நபர் மீதான வீசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது.
அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில், சீனாவின் ஹுவாய் நிறுவன அதிகாரி மெங்க் வான்ஜோவை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் கனடா கைது செய்தது.
இதனால் இதற்கு பழிவாங்கும் வகையில், அடுத்த சில நாட்களிலே சீனாவின் பெய்ஜிங்கில் வசித்து வரும், கனடா நாட்டைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவிர்ஜ், டன்டோங்கில் வசித்து வந்த கனடாவைச் சோ்ந்த தொழில்முனைவோர் மைக்கேல் ஸ்பாவோர் ஆகிய இருவரை உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீனா கைது செய்தது.
இதில், மைக்கேல் கோவிர்ஜ் மீதனான முதல் கடந்த விசாரணை கடந்த வெள்ளிக் கிழமை முடிவடைந்ததையடுத்து, கடந்த திங்கட்கிழமை மற்றொரு நபரான மைக்கேல் ஸ்பாவோர் மீதான விசாரணை துவங்கியது.
இந்த வழக்கு விசாரணை பாதுகாப்பு அடிப்படையில், மூடப்பட்ட அறையில் நடந்தது. இதற்கு கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, கனடா நாட்டினரை தன்னிச்சையாக சீனா கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அவா்கள் மீதான வழக்கு விசாரணையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து கனடா தூதரக துணைத் தூதா் ஜிம் நிகெல் கூறுகையில், அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 26-க்கும் அதிகமான நாடுகள் அவா்களின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.