தடுப்பூசி விடயத்தில் சீனாவின் வெற்றி அவமானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
தடுப்பூசி விடயத்தில் சீனா இவ்வளவு சீக்கிரத்தில் வெற்றி பெற்றுவிட்டதைப் பார்க்கும்போது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களாகிய நமக்கு வெட்கமாகத்தான் உள்ளது என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
சீனாவின் தடுப்பூசி குறித்து பேசியுள்ள மேக்ரான், சீன தடுப்பூசி குறித்த விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதால், அவற்றைப் பயன்படுத்தினால், ஒரு வேளை அவை செயல் திறன் அற்றவையாக இருக்கும்பட்சத்தில், புதிது புதிதாக திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் உருவாக வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.
என்றாலும், இவ்வளவு சீக்கிரம் சீனா தடுப்பூசியை தயாரித்து மற்ற நாடுகளுக்கு வழங்கத் தொடங்கிவிட்டதைப் பார்க்கும்போது, நமக்கெல்லாம் கொஞ்சம் வெட்கமாகத்தான் உள்ளது என்றார் அவர்.
பிரான்சின் தடுப்பூசி தயாரிக்கு நிறுவனமான Sanofi இன்னமும் கொரோனாவுக்கெதிராக தடுப்பூசி ஒன்றைத் தயாரிக்க தடுமாறுவதைப் பார்த்தால் அவர் சொல்வதில் நியாயம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.