தைவானை அச்சுறுத்தும் சீனாவின் பிரம்மாண்ட போர் பயிற்சி: பரபரப்பு காட்சிகள்
தைவானை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சீனா தனது பிரம்மாண்டமான ராணுவ பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் தலைநகர் தைபேவிற்கு சென்று திரும்பினார்.
2-ம் உலகப்போருக்கு பிறகு சீனாவிடம் இருந்து பிரிந்து சென்று பிறகு தன்னை சுகந்திர நாடாக தைவான் அறிவித்து வரும் நிலையில், சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக உரிமைக்கோரி வருகிறது.
More footage showing the #Chinese military exercises near #Taiwan. pic.twitter.com/5nUrbxlcsD
— NEXTA (@nexta_tv) August 4, 2022
இந்த சூழ்நிலையில், அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் சீனா தனது ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது.
இதன் பகுதியாக வரும் 4ம் திகதி முதல் 7ம் திகதி வரை தைவானை சுற்றியுள்ள ஆறு கடல்பகுதிகளில் சீனா தனது பிரம்மாண்டமான விமானப் படை மற்றும் கடற்படையின் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் சீன ராணுவ பயிற்சியின் போது தைவான் மீது சீன ராணுவம் ஏவுகணைகளை வீசியதாக குற்றம்சாட்டியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சி! ஏவுகணைகள் ஜப்பானில் விழுந்ததால் பதற்றம்... புகைப்படங்கள்
அத்துடன் இதுத் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.