விண்வெளியில் அரிசியை விளைய செய்து சாதனை: சீனாவிற்கு குவியும் பாராட்டுகள்!
கட்டப்பட்டு வரும் விண்வெளி நிலையத்தில் விளைவிக்கப்பட்ட அரசி.
குறைந்த ஈர்ப்பு வீசை கொண்ட சூழலில் வளர்க்கப்பட்டதாக தகவல்.
கட்டுமான பணி நடைபெற்று வரும் விண்வெளி நிலையத்தில் உணவு தானியமான அரிசியை விளைய செய்து சீன விண்வெளி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சீனாவால் விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் விண்வெளி நிலையத்தில், நெல்(rice) மற்றும் தாலே கிரெஸ்( Thale cress) போன்ற தாவரங்களை செயற்கை முறை கட்டமைப்பில் வைத்து வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.
சைனீஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் (CAS) இந்த ஆண்டு ஜூலை முதல் ஆய்வகத்தில் வளர்க்கப்படும் நெல்(rice) மற்றும் தாலே கிரெஸ்( Thale cress) போன்ற தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகிறது.
அவற்றில் சீனாவின் வென்டியன் ஆய்வகத் தொகுதியில்(Wentian lab module) தாலே கிரெஸ் மற்றும் நெல் நடவு சோதனைகள் சீராக நடந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் போது தாலே கிரேஸ் விதை நான்கு இலைகளை உற்பத்தி செய்து இருப்பதாகவும், நெல் விதைகள் 30 சென்டிமீட்டர்கள் வரை வளர்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாவரங்கள் சீனாவால் விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் விண்வெளி நிலையத்தில், மிக குறைந்த அளவிலான ஈர்ப்பு விசையில், செயற்கை முறை ஆய்வகத்தில் வைத்து வளர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோதனையில் கதிர்வீச்சு அளவுகள் அதிகமாக இருக்கும் விண்வெளியில், தாவரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளும் முயற்சியில் சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக CAS மூலக்கூறு தாவர அறிவியலின் ஆராய்ச்சியாளர் Zheng Huiqiong, CGTN யிடம் தெரிவித்த தகவலில், இரண்டு சோதனைகளும் விண்வெளியில் ஒவ்வொரு தாவரத்தின் வாழ்க்கைச் சுழற்சியையும் பகுப்பாய்வு செய்து, தாவரங்களை வளர்ப்பதற்கும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் மைக்ரோ கிராவிட்டி சூழலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்து ஆராயும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் பூமி போன்ற நிலைமைகளைப் பிரதிபலிக்கும் ஒரு செயற்கை சூழலில் மட்டுமே பயிர்களை வளர்க்க முடியும், மேலும் "பூக்கும் தாவரங்களுடன் ஒப்பிடுகையில், விண்வெளி மற்றும் மைக்ரோ கிராவிட்டி சூழலுக்கு ஏற்ற அதிகமான பயிர்களைக் கண்டறியலாம் என்று ஜெங் தெரிவித்துள்ளார்.
சீனா விண்வெளியில் தாவர விதைகளை பரிசோதிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஜூலை மாதம், விண்வெளியில் இருந்து திரும்பிய விதைகளில் இருந்து பயிரிடப்பட்ட முதல் தொகுதி அரிசியை சீனா பூமிக்கு கொண்டு வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: பிச்சை எடுக்கும் முதியோருக்கு...100 மில்லியன் டாலர்கள் வழங்க நீதிபதி உத்தரவு
சீனாவால் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் விண்வெளி நிலையத்தின் வேலைகள் முடிவடையும் தருணத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.