இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை: அமைச்சர் தகவல்
சினோபெக் நிறுவனம் இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் எரிபொருள்
இலங்கையில் நேற்று (15.08.2023) செய்தியாளர்களை சந்தித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முக்கியமான விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், சினோபெக் நிறுவனம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட மிக குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் முதல்
இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் சினோபெக் நிறுவனத்தின் செயற்பாடுகள் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்குள் அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |