பிரித்தானியாவுக்குள் சீன நிறுவனத்துக்கு அனுமதி: பதறும் பாதுகாப்பு அமைச்சகம்
பிரித்தானியாவுக்குள் சீன நிறுவனம் ஒன்று அனுமதிக்கப்பட உள்ள நிலையில், அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என பலதரப்பிலிருந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்குள் சீன நிறுவனத்துக்கு அனுமதி
பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் சமீபத்தில் சீனா சென்றிருந்தார். அதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் இயங்க சீன நிறுவனம் ஒன்றிற்கு அனுமதியளிக்கப்பட உள்ளது.
இத்தாலி, நோர்வே நாடுகளுக்குச் சொந்தமான நிறுவனமான Vårgrønn என்னும் நிறுவனமும், ஜப்பானின் Flotation Energy என்னும் நிறுவனமும் இணைந்து காற்றாலை அமைக்கும் திட்டம் ஒன்றை பிரித்தானியாவுக்காக நிறைவேற்ற உள்ளன.
விடயம் என்னவென்றால், காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அந்த திட்டத்துக்கான turbines என்னும் கருவிகளை, சீனாவின் Mingyang Smart Energy என்னும் நிறுவனம் விநியோகிக்க உள்ளது.
பலதரப்பிலிருந்தும் எச்சரிக்கை
ஆனால், சீன சீன நிறுவனம் ஒன்றை பிரித்தானியாவுக்குள் அனுமதிப்பதற்கு பலதரப்பிலிருந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலில் சீன நிறுவனத்தை பிரித்தானியாவுக்குள் அனுமதிப்பதால், அமெரிக்காவின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என மூத்த அரசியல் ஆலோசகர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அதேபோல, சீன நிறுவனத்தை பிரித்தானியாவுக்குள் அனுமதித்தால், அதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கடலில் மிதக்கவிடப்படும் காற்றாலைகளை பார்வையிட எப்போது வேண்டுமானாலும் சீன நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம்.
அப்படி அவர்கள் வரும்போது, அவர்கள் அந்த காற்றாலைகளில் உளவு பார்க்கும் கருவிகளை பொருத்தக்கூடும் என அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
ஆற்றல் அமைச்சகமோ, மின்சாரம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சீனா வீடுகளையும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் இருளில் மூழ்கடித்துவிடலாம் என எச்சரித்துள்ளது.
லேபர் அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |