சீனர்களின் உணவுப்பழக்கம் பிரான்ஸ் விளையாட்டுத்துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்
சீனர்களின் உணவுப்பழக்கம், பிரான்சிலுள்ள விளையாட்டுத்துறை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவ்ல் வெளியாகியுள்ளது.
சீனர்களின் உணவுப்பழக்கம்...
பிரான்ஸ் நாட்டில் பாட்மின்டன் விளையாடுவோர் பயன்படுத்தும் shuttlecock என்னும் பூப்பந்துகள் சீனாவில்தான் தயாராகின்றன.
ஆனால், சீனர்களின் உணவுப்பழக்கம், பிரான்ஸ் நாட்டில் பாட்மின்டன் விளையாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சீனாவில் வளர்க்கப்படும் வாத்துக்களிலிருந்துதான் இந்த பூப்பந்துகளில் பயன்படுத்தப்படும் இறக்கைகள் பெறப்படுகின்றன.
விடயம் என்னவென்றால், சீனாவில் சீனர்களின் விருப்ப உணவுகளில் ஒன்றான பன்றி இறைச்சியின் விலை குறைந்துவருகிறது.
பன்றி இறைச்சி விலை குறைந்துள்ளதால் பன்றி இறைச்சி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
ஆக, சந்தையின் பன்றி இறைச்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், வாத்துக்களை வளர்த்துவந்த விவசாயிகள் தற்போது வாத்துக்களுக்கு பதிலாக பன்றி வளர்க்கத் துவங்கியுள்ளனர்.
வாத்துக்கள் குறைந்த அளவிலேயே வளர்க்கப்படுவதால், குறைந்த அளவிலேயே அவை கொல்லப்படுகின்றன. எனவே, வாத்து இறக்கைகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
வாத்து இறக்கைகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், பாட்மின்டனுக்கான பூப்பந்துகள் தயாரிப்பு குறைந்துவருகிறது.
பூப்பந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துவருகிறது.
மொத்தத்தில், சீனர்களின் உணவுப்பழக்கம், பிரான்ஸ் நாட்டில் பாட்மின்டன் விளையாட்டின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |