“இனி முத்தத்திற்கு பஞ்சம் இல்லை” காதலர்களுக்காக வந்தாச்சு Remote Kissing device! சீனா அசத்தல்
சீனாவை சேர்ந்த ஜியாங் சோங்லி என்ற நபர், தொலைதூரக் காதலர்கள் தங்களது உண்மையான முத்தத்தை பரிமாறிக் கொள்வதற்காக remote Kissing device என்ற புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளார்.
ரிமோட் கிஸ் சாதனம்
சீனாவில் உள்ள சாங்கோ தொழிற்கல்வி என்ற நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி உலகம் முழுவதும் பயனர்களை மின்னணு முறையில் முத்தம் அனுப்ப இந்த சாதனம் அனுமதிக்கிறது.
இந்த ரிமோட் கிஸ் சாதனம் ஒரு ஜோடி சிலிகான் உதடுகளாகும், அதில் உள்ள அழுத்த உணரிகள் மற்றும் சிறிய மோட்டார்கள் ஆகியவை காதலனின் முத்தத்தின் அழுத்தம், இயக்கம் மற்றும் வெப்பநிலையை மீண்டும் உருவாக்க உறுதியளிக்கின்றன.
இது தொடர்பாக ரிமோட் கிஸ் டிசைன் குழுவின் தலைவரான ஜியாங் ஜாங்லி அளித்துள்ள விளக்கத்தில், எனது பல்கலைக்கழகத்தில், நான் என் காதலியுடன் தொலைதூர உறவில் இருந்தேன், எனவே நாங்கள் ஒருவரையொருவர் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொள்கிறோம்.அங்குதான் இந்த சாதனத்தின் உத்வேகம் உருவானது" என தெரிவித்துள்ளார்.
288 யுவான் விலை நிர்ணயம்
ரிமோட் கிஸ் சாதனம் பயனரின் தொலைபேசியுடன் புளூடூத் மூலமாக இணைக்கப்படுகிறது. இவை இணைக்கப்பட்டதும் உலகத்தின் மறுபக்கத்தில் உள்ள ஒருவரை இந்த சாதனம் மூலம் ஸ்மூச் செய்ய முடியும்.
மேலும் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து, இந்த சாதனத்தை தொலைபேசியுடன் இணைத்து, இதில் உள்ள சிலிகான் உதடுகளில் முத்தமிட்டால், பிரஷர் சென்சார் ஆக்சுவேட்டர் மூலம் உண்மையான முத்தத்தை இணையருக்கு வழங்குகிறது.
இந்த சாதனம் சீனாவில் ஷாப்பிங் தளமான Taobao மூலம் விற்பனைக்கு வருகிறது, இதன் விலை 288 யுவான் அதாவது £35 பவுண்ட் விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.