இந்திய வானில் தெரிந்த நெருப்பு மழை! உண்மையில் அது என்ன? வைரலாகும் வீடியோக்கள்
இந்தியாவில் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள பகுதிகளில் பூமியை நோக்கி எரிகற்கள் வரும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் இருந்து இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. விண்ணில் தெறிந்தது விண்கற்கள் என தகவல்கள் வெளியாகின.
பெரும்பாலும் 'ஷூட்டிங் ஸ்டார்ஸ்' என்று அழைக்கப்படும் விண்கற்கள் பாறைப் பொருட்களாகும், அவை பூமியின் வளிமண்டலத்தில் வினாடிக்கு 30 முதல் 60 கிமீ என பெரும் வேகத்தில் நுழைகின்றன. அவை ஒளிக் கோடுகளின் மழையை உருவாக்குகின்றன. இது சாதாரணமான ஒரு நிகழ்வு தான் என கூறப்படுகிறது.
WATCH: Meteor shower? No, it's a Chinese rocket launched in February of last year. The rocket reentered the Earth's atmosphere and burned up over India pic.twitter.com/ZWtA4K4Xnp
— Insider Paper (@TheInsiderPaper) April 2, 2022
ஆனால், இந்தியா டுடே செய்தியின்படி, சனிக்கிழமையன்று மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் இரவு வானத்தில் விண்கற்கள் பொழிவது போல் தோன்றிய இந்த ஒளி, உண்மையில் ஒரு சீன ரொக்கெட்டின் எச்சம் என்றும் அது பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்துள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானி ஜொனாதன் மெக்டோவல் கூறியுள்ளார்.
Chinese Chang Zheng 5B rocket, which was launched in February 2021, reentered Earth’s atmosphere on Saturday and burned up in the skies over India pic.twitter.com/kwFJvOVHtp
— Anant Tapadia (@anant_tap) April 2, 2022
பிப்ரவரி 2021-ல் ஏவப்பட்ட சீன சாங் ஜெங் 5 பி வரிசை எண் Y77 ரொக்கெட்டின் மூன்றாவது கட்டமான பாகம், சனிக்கிழமையன்று பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து இந்தியாவின் மீது வானத்தில் எரிந்தது. ரொக்கெட்டில் இருந்து பெரும்பாலான குப்பைகள் மீண்டும் நுழையும்போது எரிக்கப்படும் மற்றும் எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை.
அதேபோல், 3பி ராக்கெட் பாகங்கள் மறு நுழைவு சனிக்கிழமையன்று எதிர்பார்க்கப்பட்டதாக அமெரிக்க வானியலாளர் ஜொனாதன் மெக்டோவல் கூறியுள்ளார்.
Ca fait flipper quand même ! ?
— Thomas Racillon (@racillon) April 2, 2022
Chinese Chang Zheng 5B rocket, which was launched in February 2021, reentered Earth’s atmosphere on Saturday and burned up in the skies over India. Most debris from the rocket will be burned up on re-entry and is highly unlikely to cause any harm. pic.twitter.com/Sr8UOGyBys
#WATCH | Maharashtra: In what appears to be a meteor shower was witnessed over the skies of Nagpur & several other parts of the state. pic.twitter.com/kPUfL9P18R
— ANI (@ANI) April 2, 2022