இலங்கை நாட்டின் கடல் வளங்களை ஆராய தொடங்கிய சீன கப்பல்: ஆதிக்கம் ஆரம்பிக்கிறதா?
கொழும்புவை வந்தடைந்த சீன ஆராய்ச்சி கப்பலை, இலங்கை கடற்கரையில் தனது வேலையை நேற்று தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீன ஆராய்ச்சி கப்பல்
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான, 'ஷி யான் 6' பல நூறு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும், செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் கொண்டது.
இந்த கப்பலை இலங்கைக்கு அருகே சர்வதேச கடற்பகுதியில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த இலங்கை அரசிடம் சீனா கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கைக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த 23 -ம் திகதி மாலை கொழும்பு துறைமுகத்திற்கு சீன கப்பல் வந்தடைந்தது.
ஆய்வு
இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியிலும், இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) மற்றும் ருஹூனா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வை சீன கப்பல் மேற்கொள்ளும்.
சீனாவின் ஆதிக்கம் காரணமாக, கடல் வளங்களை ஆராய்வதற்கு ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்கு சீனா அனுப்பி வைத்துள்ளது.
இருப்பினும், வெளிநாட்டுக் கப்பல்களுக்கு செயல்பட்டு நடைமுறை பின்பற்றுவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கு ஆபத்தா?
இந்த சீன கப்பலானது 17 நாள்கள் தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இதனால், இலங்கையின் சர்வதேச கடற்பகுதியில் இருந்து தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களையும் சீன கப்பல் உளவு பார்க்கும்.
இதனால், இந்தியா குறித்த தகவல்களை எளிதில் சேகரிக்க முடியும் என்பதால் இந்தியா மற்றும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், இலங்கைக்கு பொருளாதார ரீதியாக சீனா உதவியதால் இலங்கை அரசு இதனை ஒப்புக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |