பிரித்தானிய போர்க்கப்பலின் பாகங்களை திருடிய சீனக் கப்பலை கைப்பற்றிய மலேசியா
இரண்டாம் உலகப்போரில் சேதமடைந்த பிரித்தானிய போர்க்கப்பலில் இருந்து உலோகத்தை கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படும் சீனக் கப்பலை மலேசியா தடுத்து வைத்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்ட சீன கப்பல்
தென் சீனக் கடலில் மலேசியக் கடலோரப் பகுதியில் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று இருப்பதாக கடந்த மாதம் மீனவர்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் மலேசிய அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை, மலேசியாவின் தெற்கு ஜோகூர் மாநிலத்திலிருந்து சீன சரக்கு கப்பலொன்று (Chinese bulk carrier) கைப்பற்றப்பட்டது. அது அங்கு சட்டவிரோதமாக நங்கூரமிட்டிருந்தது, மேலும் 21 சீனப் பிரஜைகள், 10 பங்களாதேஷ் மற்றும் ஒரு மலேசியர் உட்பட கப்பலில் இருந்த குழுவினர், போர்க் கல்லறையில் இருந்து பழைய உலோகம் மற்றும் பீரங்கி குண்டுகளை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
AFP
மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் (எம்எம்இஏ) தலைவர் நூருல் ஹிசாம் ஜகாரியா, இந்த குண்டுகள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறினார்.
தென் சீனக் கடலில் கடற்படை போர் கல்லறையின் வரலாறு
இந்த உடைந்த பாகங்கள் HMS Prince of Wales மற்றும் HMS Repulse ஆகியவற்றிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது, இவை 1941-ல் பேர்ல் ஹார்பர் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஜப்பானிய டார்பிடோக்களால் மூழ்கடிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் மொத்தம் 842 மாலுமிகள் இறந்தனர், இது இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டுப் படைகளின் கொடிய கடற்படை துயரங்களில் ஒன்றாகும்.
சீனக் கப்பல் மூலம் கப்பல் இடிபாடுகளைக் கொள்ளையடித்ததற்கு லண்டனில் உள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் கண்டனம் தெரிவித்தது.
DailyMail
முதல் முறையல்லை
HMS Prince of Wales மற்றும் HMS Repulse போர் கல்லறைகளிலிருந்து கப்பல் சிதைவுகளை கொள்ளையடிப்பது முதல் முறையாக நடக்கவில்லை. 2017-ல் இதே போன்ற அறிக்கைகள் வெளிவந்தன.
AP