பஃபே-யில் வைக்கப்பட்ட உணவை திருடிய பெண்: 5 லட்சம் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவு
சீனாவில் ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட பஃபே உணவை வீட்டிற்கு திருடிக் கொண்டு சென்ற பெண், தற்போது லட்சக் கணக்கில் அபராதத்தை எதிர் கொண்டு இருக்கிறார்.
சிசிடிவி-யில் சிக்கிய பெண்
சீனாவில் பஃபே உணவு முறையை வழங்கும் ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் தொடர்ச்சியாக உணவினை திருடிக் கொண்டு சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஹோட்டல் மேலாளர் வு வெளியிட்ட 2022ன் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இரண்டு வார காட்சிகள் உள்ளடக்கிய வீடியோ தொகுப்பில், பெண் ஒருவர் தொடர்ச்சியாக உணவுகளை திருடிக் கொண்டு செல்வது பார்க்க முடிகிறது.
Photo: Shutterstock
இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் வழங்கிய தகவலில், சம்பந்தப்பட்ட பெண் ஒவ்வொரு முறையும் ஹோட்டலுக்கு வரும் போது அவரால் சாப்பிட முடிந்த அளவுக்கு மேலே உணவுகளை ஆர்டர் செய்து வந்ததாகவும், முதலில் நாங்கள் அவரை அதிக பசி உடைய நபர் என்றே கருதினோம், ஆனால் 218 யுவான்(2500 ரூபாய்) விலையுள்ள தனிநபருக்கான பஃபே உணவு முறையில், அவர் சராசரியாக 10,000 யுவான்(1.18 லட்சம்) மதிப்பிற்கு உணவுகளை ஆர்டர் செய்தார்.
இது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சாப்பிடுவதை விட 10 மடங்கு அதிகமாகும்.
இதனால் அவரது நடவடிக்கைகளை கவனிக்க தொடங்கிய போது, அவர் ஒவ்வொரு முறை ஹோட்டலுக்கு வரும் போது அதிகமான உணவுகளை ஆர்டர் செய்து, அவற்றை தனது பிரத்யேகமான கைப்பையில் வைத்து திருடிக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
Photo: Baidu
அபராதம் செலுத்திய பெண்
இந்நிலையில் ஹோட்டலில் உணவு திருட்டில் ஈடுபட்ட பெண்ணின் பெயர் வென் என அடையாளம் காணப்பட்டுள்ளது, அத்துடன் அவர் மீது ஹோட்டல் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதிகப்படியான உணவு வீணாவதை தடுக்கவே தான் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக வென் தன்னுடைய செயலை நியாயப்படுத்தினார்.
இருப்பினும் அவர் சிசிடிவி-யில் பிடிபட்ட 5 வாரங்களுக்கான உணவின் அபராதத்தை மட்டும் 45,000யுவான்(5.31 லட்சம்) வென் செலுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Photo: SCMP composite
இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட வென் தன்னுடைய அபராத தொகையுடன், வழக்குக்கான 8000 யுவான்(94,000 ரூபாய்) சேர்த்து செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.