இந்தி தெரிந்திருந்தால் ஐஸ்வர்யா ராயை நான்..பிரபல நடிகர் மோசமாக பேசிய வீடியோவை பகிர்ந்த சின்மயி
நடிகர் ராதாரவி ஆபாசமாக பேசிய வீடியோ ஒன்றை மன்சூர் அலி கானுடன் ஒப்பிட்டு, பாடகி சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கண்டித்துள்ளார்.
சர்ச்சை பேட்டி
நடிகர் மன்சூர் அலி கான் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது பேச்சுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக பாடகி சின்மயியும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் சின்மயி மீண்டும் ஒரு பதிவினை நடிகர் ராதாரவியை குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
"I have once said that if I had known Hindi, I would have had the opportunity to rape Aishwarya Rai. What I meant was I would have acted in Bollywood. Why the hell should I then act with these saniyans (idots/sinners in Tamil)." - Radha Ravi
— Chinmayi Sripaada (@Chinmayi) November 21, 2023
Here in this video in Tamil where you… pic.twitter.com/j9qLQwdRA7
சின்மயி கேள்வி
அந்த பதிவில், நடிகர் ராதாரவி முன்னர் மேடையில் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''எனக்கு இந்தி தெரிந்திருந்தால் ஐஸ்வர்யா ராயை பலாத்காரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நான் ஒருமுறை சொன்னேன். நான் பாலிவுட்டில் நடித்திருப்பேன் என்று நான் நினைத்தேன். நான் ஏன் இந்த சனியன்களுடன் (முட்டாள்கள்/பாவிகள்)'' - ராதா ரவி
'இதோ தமிழில் உள்ள இந்த வீடியோவில், இது ஒரு பெரிய நகைச்சுவை என்று மக்கள் சிரிப்பதை நீங்கள் காண்பீர்கள். தமிழ்நாட்டின் சில திரைப்பட சங்கங்களில் முக்கியமான அதிகாரியாக இருக்கிறார். மன்சூர் அலி கான் சொன்னதைத்தான் ராதாரவியும் சொன்னார்.
ஐஸ்வர்யா ராயை வைத்து பலாத்கார நகைச்சுவையை ராதாரவி செய்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மனிதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று யாரும் ஏன் கருதவில்லை என்பதை நான் உண்மையில் அறிய விரும்புகிறேன்' என கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |