500 லிட்டர் தண்ணீர் போத்தல்களுடன் வந்த பாடகி சின்மயி.., தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
சென்னையில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சின்மயி ஆதரவு
சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து தொடர்ந்து 6-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் தங்களது போராட்டத்தில் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும், நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
இவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில், நேற்று அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்டது.
இதனால், தூய்மை பணியாளர்கள் போராடும் இடத்திற்கு பாடகி சின்மயி உடனடியாக 500 லிட்டர் தண்ணீர் போத்தல்களுடன் வந்தார். அங்கு, தூய்மை பணியாளர்களின் நிரந்தர பணி தொடர்பான கோரிக்கைக்கு பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |