இரண்டு மாதம் வரை பழுதடையாமல் இருக்கும் சின்ன வெங்காய தொக்கு - செய்வது எப்படி?
By Kirthiga
4 months ago
சின்ன வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே உடல் அதிகமாக இருப்பவர்கள் தாராளமக வெங்காயத்தை சாப்பிடலாம்.
இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அப்படிப்பட்ட இந்த சின்ன வெங்காயத்தை வைத்து எப்படி தொக்கு செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 300 கிராம்
- வெங்காயம் - 200 கிராம்
மசாலா தயாரிக்க
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- தனியா - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெங்காய தொக்குசெய்ய
- நல்லெண்ணெய் - 1/2 கப்
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை
- புளி தண்ணீர் - 1 1/2 கப்
- வெல்லம் - 1 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து சிறிது சிறிதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் மசாலா செய்வதற்கு, மசாலாவிற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- அதையடுத்து அதை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நல்லெண்ணெய், உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
- பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கலக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, புளி தண்ணீர், வெல்லம் சேர்த்து 5நிமிடம் வதக்கவும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US