கணவரை பிரியும் நடிகர் சீரஞ்சீவி மகள்? என்ன காரணம்? தீயாய் பரவும் தகவல்!
பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவரை பிரிவதாக சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சமந்தா விவாகரத்து அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக தன் பெயருக்கு பின்னால் இருந்த குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கினார்.

பிறகு சில வாரங்களில் இருவரும் தங்கள் விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனுஷ் - ஐஷ்வர்யா இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக அறிவித்தனர்.
இப்போது அடுத்ததாக ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா விவாகரத்து செய்யப்போவதாக செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை நீக்கியுள்ளார். இவர் நடிகர் கல்யாண் தேவ் என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் கணவர் பெயரை இணைத்து ஸ்ரீஜா கல்யாண் என்று வைத்திருந்தார். இப்போது அதை நீக்கி சிரஞ்சீவியின் குடும்ப பெயரான கொனிடேலா என்பதை சேர்த்துள்ளார்.
இதனால் இவர்கள் பிரிய வாய்ப்புள்ளதாக சமூகத்தளத்தில் செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால் அந்த செய்திகளை சிரஞ்சீவி குடும்பத்தில் யாரும் மறுக்கவில்லை.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        