சித்திரை புத்தாண்டு அன்று வீட்டில் எலுமிச்சை வைத்து கட்டாயம் வழிபட வேண்டுமாம்
தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தான் பண்டிகையாக கொண்டாடுகின்றோம்.
இந்த சித்திரை புத்தாண்டை பலர் பல பெயர்களில் அழைப்பார்கள்.
தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷீ, சித்திரை கனி மற்றும் சங்கராந்தி எனும் அழைக்கப்படும்.
மேலும் ஒவ்வொரு சித்திரை வருடமும் ஒவ்வொரு பெயர்களால் அழைக்கப்படும். இந்த ஆண்டு சித்திரை ஆண்டு சோபகிருது ஆண்டாகும்.
இந்த சித்திரையை வரவேற்கும் வகையாக சில வழிமுறைகளில் கீழ் ஒரு சில விடயங்களை மேற்க்கொள்வது வழக்கம்.
புத்தாண்டு பூஜை
-
அனைத்து வீடுகளிலும் பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு தட்டில் மா பலா வாழை ஆகிய முக்கனிகள் மற்றும் வெற்றில் பாக்கு மேலும் எலுமிச்சையை கட்டாயமாக வைத்து ஏதாவது ஒரு தங்க நகையை வைக்க வேண்டும்.
- அந்த நாள் தொடக்கதில் விழித்தெழும் பொழுது அந்த தட்டில் உள்ள பொருட்களை பார்ப்பது சிறந்தது.
-
பின் மருத்து நீர் வைத்து குளித்து முடித்த பிறகு, விளக்கேற்றி வைத்து, அந்த பழங்கள் வைத்துள்ள தட்டிற்கு தீப தூப ஆராதனையை காட்டி வழிப்பட வேண்டும்.
- சாப்பிடும் உணவு அறுசுவைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். முக்கியமாக கசப்ப தன்மை சிறிதளவு இருக்க வேண்டும்.
- பூஜைகள் முடிந்தவுடன் பெரியவர்களின் ஆசியுடன் கிடைக்கும் கைவிஷேட பணத்தை பணப்பையில் வைத்தால் செல்வம் பெருகும்.
- பசு மாட்டிற்கு அகத்திக் கீரை, கோதுமையால் ஆன உணவுகளை கொடுத்தல் நல்லது.
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து, இன்றும் எப்போதும் உங்களை செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிக்கட்டும்! தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்!!