லண்டன் நீச்சல் குளத்தில் குளோரின் கசிவு: மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட 9 சிறுவர்கள்
நீச்சல் குளத்தில் ஏற்பட்ட குளோரின் கசிவுக்கு பிறகு 9 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீச்சல் குளத்தில் குளோரின் கசிவு
மேற்கு லண்டன் பகுதியில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் குளோரின் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து 9 சிறுவர்கள் மற்றும் 2 பெரியவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக Sudbury பகுதியின் Watford சாலையில் அமைந்துள்ள Vale Farm விளையாட்டு மையத்திற்கு அவசர கால குழுவினர் 13:34 BST மணிக்கு அழைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட 11 பேருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிபிசியின் கணிப்புகள் படி, பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் மோசமான உடல்நிலைக்கு செல்லவில்லை என்றும், 3 குழந்தைகளுக்கு மட்டுமே கூடுதலான மருத்துவ பரிசோதனை தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கசிவு கண்டுபிடிப்பு
இந்த சம்பவத்தை தொடர்ந்து லண்டன் தீயணைப்பு துறையினர் 3 மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குளோரின் கசிவு ஏற்பட்டத்தை கண்டுபிடித்தனர்.
மேலும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட கட்டிடத்தை விட்டு 150 பேர் வெளியேறியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |