உடல் எடையை குறைக்க உதவும் சாக்லேட் காபி சியா புட்டிங்: ரெசிபி இதோ
காபி பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக பில்டர் காபி என்பது தென் இந்தியாவின் ஒரு கிளாசிக் பானமாகும்.
உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு இந்த காபி சியா புட்டிங் ஒரு சிறந்த உணவு.
அந்தவகையில், சாக்லேட் காபி சியா புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாக்லேட் பவுடர்- 2 ஸ்பூன்
- வாழைப்பழம்- ½
- தேன்- 2 ஸ்பூன்
- சியா விதை- 2 ஸ்பூன்
- பால்- 180mg
- காபி பவுடர்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ள வேண்டும். பிறகு சாக்லேட் பவுடர் காபி பவுடர் சியா விதைகளை சேர்த்து கிளறுங்கள்.
இப்போது இதை நன்கு கலந்த பிறகு தேவையான அளவு பால் சேர்த்து கிளற வேண்டும். பின்னர் சிறிதளவு தேன் சேர்த்து கிளற வேண்டும்.
இப்போது இதை ஒரு கப்பில் ஊற்றி குறைந்தது 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் எட்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
இந்த சாக்லேட் காபி சியா புட்டிங் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
மேலும், இது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. தினசரி காலையில் இதை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைய உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |