கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: தித்திக்கும் சாக்லேட் பிளம் கேக்.., எப்படி செய்வது?
கிறிஸ்துமஸ் என்றால் சாண்டா தாத்தா, பிளம் கேக், வையின், கிறிஸ்துமஸ் ட்ரீ போன்ற பல விடயங்கள் உள்ளது.
அந்தவகையில், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சுவையான சாக்லேட் பிளம் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா மாவு- 300g
- வெண்ணிலா எசென்ஸ்- 1 சிட்டிகை
- எண்ணெய்- ¼ கப்
- பிரவுன் சுகர்- 1 கப்
- முட்டை- 3
- ஆரஞ்சு பழம்- 2
- பேரிச்சம்பழம்- 5
- காய்ந்த திராட்சை- சிறிதளவு
- காய்ந்த கருப்பு திராட்சை- சிறிதளவு
- பாதாம் பருப்பு- சிறிதளவு
- முந்திரி பருப்பு- சிறிதளவு
- டூட்டி ஃப்ரூட்டி - 2 கப்
- கொக்கோ பவுடர் - ¼ கப்
- பட்டைத்தூள்- 1 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- பேக்கிங் சோடா- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு சாறு சேர்த்து அதில் நறுக்கி வைத்த ட்ரை புரூட்ஸ், பேரிச்சம்பழம் மற்றும் நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
இதனைதொடர்ந்து ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், பட்டைத்தூள், ஏலக்காய்த்தூள், பேக்கிங் சோடா, ஆகியவற்றை சலித்து எடுத்து கொள்ளுங்கள்.
பின் மற்றொரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து அதனை நன்கு பீட் செய்து அதில் வெண்ணிலா எசென்ஸ், நாட்டு சக்கரை, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த கலவையில் மைதா மற்றும் கோகோ பவுடர் கலவையை கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் 8 மணிநேரம் ஊற வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மற்றும் டூட்டி ஃப்ரூட்டி, நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதற்கு பிறகு ஒரு கேக் டின் எடுத்து அதில் பட்டர் பேப்பர் வைத்து, இந்த கேக் கலவையை அதில் ஊற்ற வேண்டும்.
அதேபோல 15 நிமிடம் ஓவனை 180°C அளவில் சூடாக்கி கேக் டின்னை வைத்து சுமார் 45 நிமிடம் 180°C அளவில் வைத்து பேக் செய்தால் சுவையான சாக்லேட் பிளம் கேக் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |