புற்றுநோயில் போராடும் பிரபல நடிகை... சிகிச்சை குறித்து உருக்கமான பதிவு
Actress Uma Sankari Cancer Treatment: பிரபல நடிகை உமா சங்கரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவரும் நிலையில் தற்போது பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகை உமா சங்கரி
கேப்டன் விஜய்காந்த் நடித்த சொக்கத்தங்கம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகை உமா சங்கரி. இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான வீரநடை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பின்பு விஜயகாந்துடன் நடித்து மக்கள் மத்தியில் தனி இடத்தினை பிடித்தார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2006ம் ஆண்டு துஷ்யந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு மகன் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் உமா சங்கரிக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்பு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வரும் இவர் புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதில் தீவிர சிகிச்சை பெற்று வரும் இவர், தனது உடல்நிலை மற்றுமு சிகிச்சை குறித்து கூறியுள்ளார்.
உமா வெளியிட்ட பதிவு
உமா வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளது என்னவெனில், கீமோதெரபி சிகிச்சை மிகவும் கடினமாக இருந்தாலும், இதைவிட நான் வலிமையானவள்.
இறுதிக்கட்ட ஊசி மருந்துகள் தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கிய முதல்படி என்று மிகுந்த தைரியத்தோடும், நம்பிக்கையோடும் பதிவிட்டுள்ளார்.

நடிகை உமா சங்கரி இந்த காலக்கட்டத்திலும் மனம் தளராமல் புன்னகையுடன் போராடிவரும் நிலையில், இந்த பதிவினை அவதானித்த மக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
முடியாத தருணத்திலும் முகத்தில் சிரிப்பை வைத்துக் கொண்டு, முழுமையாக மீண்டு வருவதற்கு போராடி வரும் நடிகை உமா சங்கரிக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறுவதுடன், பிரார்த்தனை மேற்கொண்டும் வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |