உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான சோள ஆப்பம்.., எப்படி செய்வது?
சோளம் நார்ச்சத்து, புரதம், பி வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சத்தான உணவாகும்.
இது செரிமானத்தை மேம்படுத்துதல், கொழுப்பைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரித்தல் போன்ற நன்மைகளை வழங்குகிறது.
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான சோள ஆப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சோளம்- 1 கப்
- தேங்காய்- ½ கப்
- சாதம்- ¼ கப்
- உப்பு- தேவையான அளவு
- ஈஸ்ட்- 1 ஸ்பூன்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சோளம் சேர்த்து நன்கு 2 முறை கழுவி 7 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட், சர்க்கரை மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த சோளம், தேங்காய், சாதம், உப்பு மற்றும் ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நினைக்க நன்கு வரும்வரை வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக இந்த மாவை ஆப்ப சட்டியில் ஊற்றி சுற்று எடுத்தால் சுவையான சோள ஆப்பம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |