நீங்கள் விரும்பும் ஒரு வேலையை! தமிழக வீரர் நடராஜன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள தமிழன் நடராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பிடித்துள்ளார்.
இதையடுத்து டுவிட்டரில் அவர் தனது புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நீங்கள் விரும்பும் ஒரு வேலையைத் தேர்வுசெய்யுங்கள், அப்படி செய்தால் உங்கள் வாழ்க்கையில் ஒருநாளும் நீங்கள் வேலை செய்ய வேண்டியதில்லை.
மீண்டும் அணி வீரர்களுகளுடன் இணைந்தது த்ரில்லிங்காக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
"Choose a job you love and you will never have to work a day in your life" - Thrilled to be back in blue with the boys @BCCI pic.twitter.com/gRQ3C3hZic
— Natarajan (@Natarajan_91) March 19, 2021