சுவிட்சர்லாந்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் தொடர்பில் ஒரு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில், பொதுமக்களுக்கு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் தொடர்பில் ஒரு எச்சரிக்கை செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் தொடர்பில் ஒரு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில், குறிப்பாக, பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பகுதிகளில், சில ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், மணிக்கு வெறும் 20 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு வகுப்புகள் எடுக்கின்றன.
ஆனால், அவை முறைப்படி பயிற்சியோ அங்கீகாரமோ பெறாதவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அப்படி அங்கீகாரம் பெறாத ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் பயிற்சியளிப்பது சட்ட விரோதம் என்றும் அபாயகரமானது என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

விடயம் என்னவென்றால், இந்த போலி பயிற்சி வழங்குவோரில் பலர், அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளாமல் தவிர்ப்பதற்காக, சரியாக தேர்வு நேரத்தில் தலைமறைவாகிவிடுகிறார்களாம்.
இந்த பயிற்சி தருவோருக்கு காப்பீடு இல்லாததால், அவர்களிடம் பயிற்சி பெறுவோர் விபத்து எதிலாவது சிக்கிக்கொண்டால், அவர்கள் நிலை பரிதாபமாகிவிடுகிறது.
ஆகவே, வாகன பயிற்சி பெற விரும்புவோர், கட்டணம் குறைவாக உள்ளது என்பதை மட்டும் பார்க்காமல், தங்கள் பயிற்சியாளர் முறைப்படி பயிற்சி அளிக்க அங்கீகாரம் பெற்றவரா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |