புதுசா லேப்டாப் வாங்கும் ஐடியா இருக்கா? அதற்கு முன் இதையெல்லாம் மறக்காம கவனிங்க
பல விதமான மொடல்கள் மற்றும் விதவிதமான வசதிகளுடன் லேப்டாப் வருகிறது, அதில் எதை வாங்குவது என்ற குழப்பம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
லேப்டாப்களை வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படையான விடயங்கள் குறித்து காண்போம்.
சிறந்த லேப்டாப்பை வாங்க உங்கள் பர்ஸை முழுவதுமாக காலி செய்ய வேண்டும் என்பதில்லை. நமது பட்ஜெட்டுக்குள் நமது பிடித்த மாதிரியான லேப்டாப்களை வாங்கலாம். அதன்படி, இது தான் சிறந்த லேப்டாப் என்று ஆன்லைனில் அலசி ஆராய்ந்து ஒரு மாடலை தேர்வு செய்தால் கூட அது உங்களது பட்ஜெட்டிற்குள் அடங்குகிறதா என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சம் 8GB ரேம் கொண்ட மொடல்களை தேர்வு செய்யுங்கள். 4GB ரேம் கொண்ட மாடல்களைத் தவிர்த்து விடுங்கள்.
கேமர்கள் குறைந்தபட்சம் 16GB ரேம் மொடல் லேப்டாப்பை வாங்குவது நல்லது.
ஹையர் பிரைட்னஸ் லெவல் கொண்ட Full HD (1080p) ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்ட லேப்களை வாங்குவது கண்களுக்கு சிரமம் தராமல் இருக்கும்.
எந்த சைஸ் லேப்டாப் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை நேரடியாக ஒரு ஷோரூமுக்கு சென்று குறிப்பிட்ட மாடலின் லேப்டாப்களை பார்த்து தேர்வு செய்யலாம்.