உயிருக்கு போராடிவரும் குரூப் கேப்டன் வருண் சிங்., மாணவர்களுக்காக எழுதிய கடிதம்..

Letter Helicopter Crash Chopper Crash Varun Singh Group Captain Varun Singh
By Ragavan Dec 10, 2021 10:15 AM GMT
Report

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தற்போது உயிருக்கு போராடிவரும் குரூப் கேப்டன் வருண் சிங், சமீபத்தில் பள்ளி மாணவ்களுக்காக எழுதிய ஊக்கமளிக்கும் கடிதம் வெளியாகியுள்ளது.

குன்னூர் அருகே புதன்கிழமை ஏற்பட்ட மோசமான எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், மற்றும் சில உயர் அதிகாரிகள் உட்பட, அதில் பயணித்த 14 பேரில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில், வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் கல்லூரியின் (DSSC) இயக்குநர் - குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் தப்பினார். தற்போது பெங்களூரு மருத்துவமனையில் அவருக்கு உயர் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறார். இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்டில், அவரது தேஜாஸ் இலகு ரக போர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்படவிருந்த விபத்தைத் தடுத்ததற்காக அவருக்கு சௌரிய சக்ரா (Shaurya Chakra) விருது வழங்கப்பட்டது.

உயிருக்கு போராடிவரும் குரூப் கேப்டன் வருண் சிங்., மாணவர்களுக்காக எழுதிய கடிதம்.. | Chopper Crash Group Captain Varun Singh Letter

அவரது துணிச்சலுக்காக சௌர்ய சக்ராவால் விருதை பெற்ற சமயத்தில், செப்டம்பர் 18-ஆம் திகதி அன்று ஒரு பள்ளியின் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் உள்ள உள்ளடக்கங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார், குறிப்பாக இளம் வயதினரை அவர்கள் இளமைப் பருவத்தை நெருங்கும் போது, ​​​​மாணவர்கள் சந்திக்கும் சமூக அழுத்தங்கள், கல்வி சார்ந்த சவால்கள் மற்றும் சில சமயங்களில் நிச்சயமற்ற மற்றும் பயமுறுத்தும் எதிர்காலம் போன்ற சிக்கலான தன்மைகளுடன் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அக்கடிதம் இருந்தது.

'ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதே' என எழுதிய குரூப் கேப்டன் வருண் சிங் தனது கடிதத்தில், "நான் சாதாரணமானவனாக இருந்தேன், இன்று நான் என் வாழ்க்கையில் கடினமான மைல்கற்களை எட்டியுள்ளேன்" என்று அவர் எழுதினார்.

உயிருக்கு போராடிவரும் குரூப் கேப்டன் வருண் சிங்., மாணவர்களுக்காக எழுதிய கடிதம்.. | Chopper Crash Group Captain Varun Singh Letter

“சாதாரணமாக இருப்பது பரவாயில்லை. எல்லோரும் பள்ளியில் சிறந்து விளங்க மாட்டார்கள், எல்லோரும் 90-களில் மதிப்பெண் பெற முடியாது. நீங்கள் பெற்றால், அது ஒரு அற்புதமான சாதனை மற்றும் பாராட்டப்பட வேண்டும். அதற்காக, நீங்கள் மதிப்பெண் பெறாவிட்டால், நீங்கள் சாதாரணமானவர் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் பள்ளியில் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அது வாழ்க்கையில் வரவிருக்கும் விஷயங்களின் அளவீடு அல்ல”என்று அவர் கூறினார்.

NDA-வில், அவர் படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கவில்லை என்றும், அவர் சாதாரணமானவர் என்று நினைத்ததால் தன்னம்பிக்கை இல்லை என்றும் கூறினார். ஒரு போர் படையில் பணியமர்த்தப்பட்ட பிறகுதான், அவர் தனது மனதையும் எண்ணத்தையும் செலுத்தினால் நன்றாகச் செய்ய முடியும் என்பதை உணர்ந்தார். "இந்த கட்டத்தில்தான் எனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் விஷயங்கள் திரும்பத் தொடங்கின" என்று அவர் எழுதினார்.

உயிருக்கு போராடிவரும் குரூப் கேப்டன் வருண் சிங்., மாணவர்களுக்காக எழுதிய கடிதம்.. | Chopper Crash Group Captain Varun Singh Letter

"உங்கள் திறனை கண்டறியவும், அது கலை, இசை, கிராஃபிக் வடிவமைப்பு, இலக்கியம் போன்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் எதை நோக்கி வேலை செய்தாலும், அர்ப்பணிப்புடன் இருங்கள், உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஒருபோதும் அதிக முயற்சி எடுத்திவிட்டோம் என்று நினைத்து படுக்கைக்கு ஓய்வெடுக்க செல்ல வேண்டாம்” என்று அவர் மேலும் கூறினார். அவர் மேலும் மாணவர்களை ஒருபோதும் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும், தாங்கள் என்னவாக இருக்க விரும்புகிறோமோ அப்படி இருக்க முடியாது என்று நினைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

“அது சுலபமாக வராது. அது முயற்சி எடுக்கும், நேரம் மற்றும் ஆறுதல், தியாகம் தேவைப்படும். நான் சாதாரணமானவனாக இருந்தேன், இன்று என் வாழ்க்கையில் கடினமான மைல்கற்களை எட்டியுள்ளேன். 12வது போர்டு மதிப்பெண்கள் நீங்கள் வாழ்க்கையில் எதைச் சாதிக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கும் என்று நினைக்காதீர்கள். உங்களை நம்புங்கள், அதை நோக்கி உழையுங்கள்” என்று குரூப் கேப்டன் வருண் சிங் கடிதத்தில் எழுதினார். 

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US