45 வயதிலும் சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெய்ல்! ரசிகர்கள் மிரண்ட வீடியோ
மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
கெய்ல் ருத்ரதாண்டம்
நவி மும்பையில் நேற்று நடந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் கிறிஸ் கெய்ல் மற்றும் டிவைன் ஸ்மித் இருவரும் ருத்ரதாண்டம் ஆடினர்.
இந்தக் கூட்டணி 43 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்தது. ஸ்மித் 25 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
𝐆𝐚𝐲𝐥𝐞 𝐅𝐨𝐫𝐜𝐞 𝐀𝐜𝐭𝐢𝐯𝐚𝐭𝐞𝐝! 👊
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 27, 2025
2️⃣ balls, 2️⃣ towering sixes - 𝐓𝐡𝐞 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐞 𝐁𝐨𝐬𝐬 is in 𝐬𝐞𝐬𝐬𝐢𝐨𝐧🚀
Watch the action LIVE on @JioHotstar, @Colors_Cineplex & @CCSuperhits! 📲📺#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/yFOpYUEOvv
சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெய்ல் (Chris Gayle) 19 பந்துகளில் 39 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
மேற்கிந்திய தீவுகள் வெற்றி
அடுத்து வந்த வால்டன் (9), கிர்க் எட்வார்ட்ஸ் (9) விரைவில் வெளியேற, தியோநரைன் மற்றும் நர்ஸ் அதிரடி காட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 179 ஓட்டங்கள் குவித்தது.
Opening Act: 𝐁𝐥𝐨𝐜𝐤𝐛𝐮𝐬𝐭𝐞𝐫! 🎬💥
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 27, 2025
77 off 42 balls! What a way to kick things off! 🚀#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/gOYlUHDDBH
தியோநரைன் 23 பந்துகளில் 35 ஓட்டங்களும், நர்ஸ் 13 பந்துகளில் 29 ஓட்டங்களும் எடுத்தனர். பனேசர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக பில் மஸ்டர்டட் 35 (19) ஓட்டங்களும், கிறிஸ் ஸ்கோஃபீல்ட் 32 (26) ஓட்டங்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் டெய்லர், ராம்பால் மற்றும் பென் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
𝐓𝐢𝐦𝐛𝐞𝐫! 🎯
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 27, 2025
Jerome Taylor goes straight through Schofield with a beauty! 🔥💥
📺 Catch the LIVE action now ➡️ @JioHotstar, @Colors_Cineplex & @CCSuperhits!#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/3dd8ALCAvw
The #WestIndiesMasters keep 𝐦𝐚𝐫𝐜𝐡𝐢𝐧𝐠 forward! ➡️💪
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 27, 2025
2️⃣ 𝙢𝙖𝙩𝙘𝙝𝙚𝙨, 2️⃣ 𝙬𝙞𝙣𝙨 – they mean business here at the #IMLT20 🔥✨#TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/3gfam5tM32
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |