47 வயதில் கேப்டனாக தெறிக்கவிட்ட கிறிஸ் கெய்ல்
Chris gayle, walton fifty help wi beat ban: கிறிஸ் கெய்ல் மேற்திந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணிக்காக 25 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார்.
மேற்திந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணி கிறிஸ் கெய்ல், வால்டனின் அதிரடியில் அபார வெற்றி பெற்றது.
ரோனி தலுக்தார் 96 ஓட்டங்கள்
மேற்திந்திய தீவுகள் சாம்பியன்ஸ் மற்றும் வங்காளதேசம் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
Mahmudullah Riyad leads the charge with a crucial innings, helping Bangladesh Champions post a formidable 218! A composed yet powerful performance that played a key role in setting up a mammoth total. #wcl #wcl2026 #warofchampions https://t.co/2tE7QDtVvq
— World Championship Of Legends (@WclLeague) October 9, 2026
முதலில் ஆடிய வங்காளதேசம் சாம்பியன்ஸ் அணி 218 ஓட்டங்கள் குவித்தது. ரோனி தலுக்தார் 56 பந்துகளில் 96 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 9 பவுண்டரிகள்) விளாசினார்.
அணித்தலைவர் மஹ்மதுல்லா 43 (21) ஓட்டங்களும், மஹ்முத் 36 (22) ஓட்டங்களும் எடுத்தனர். ராயத் எம்ரித் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கிறிஸ் கெய்ல் வாணவேடிக்கை
பின்னர் ஆடிய மேற்திந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணியில் கிறிஸ் கெய்ல் (Chris Gayle) சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரள வைத்தார். 25 பந்துகளை எதிர்கொண்ட கெய்ல், 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசினார்.
The Gayle Storm is brewing in Sharjah! 🌪️🔥 Chris Gayle takes on Bangladesh Champions with the power to turn the game on its head! 🏏💥 https://t.co/SaXAVKswiC
— World Championship Of Legends (@WclLeague) October 9, 2026
விக்கெட் கீப்பர் சாத்விக் வால்டன் ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 90 ஓட்டங்கள் விளாச, மேற்திந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 221 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வங்காளதேசம் சாம்பியன்ஸ் தரப்பில் கம்ரூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், எனமூல் ஹாக் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

