கிறிஸ் கெய்லை வாங்க ஆசைப்பட்ட 2 அணிகள் - ஆனால் கடைசியில் நடந்த சோகம்
ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள கிறிஸ் கெய்லை வாங்க 2 அணிகள் விருப்பம் தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சில முன்னணி வெளிநாட்டு வீரர்கள் விலகியுள்ளனர். வர்கள் தங்களின் பெயர்களை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்து கொள்ளவில்லை. இதில், 'Universal Boss' என்றழைக்கப்படும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் பங்கேற்காதது ரசிகர்களை வருத்தமடைய செய்தது.
மொத்த ஐபிஎல் தொடரில், கொல்கத்தா, பெங்களூர் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக கெயில் ஆடியுள்ளார். 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு, கெய்ல் இல்லாமல் நடைபெற போகும் முதல் ஐபிஎல் தொடர் இதுவாகும். இந்நிலையில் இந்த மூன்று அணிகளில் இரண்டு அணிகள் கெயில் பெயர் ஏல பட்டியல் இணைந்திருக்க வேண்டும் என விருப்பப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரை மீண்டும் அணியில் இணைக்க வேண்டி விருப்பம் கொண்டுள்ள நிலையில் அவர் தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்யாத காரணத்தினால், இரு அணிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.