2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய யூனிவர்சல் பாஸ்! இந்த திடீர் முடிவுக்கான காரணத்தை வெளிப்படையாக அணியிடம் கூறிய கெயில்
தொடர்ந்து பபுளில் இருப்பதனால் ஏற்பட்டுள்ள மிகுந்த சோர்வு காரணமாக நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் பயோ-பாதுகாப்பான சூழலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளதாக பஞ்சாப் அணி அறிவித்துள்ளது.
இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றிப்பெற வேண்டிய சுழலில் கெயில் இல்லாமல் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக கெயில் இரண்டு போட்டிகளில் விளையாடிவுள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப் அணி வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில மாதங்களாக CWI பபுள், CPL பபுளை தொடர்ந்து ஐபிஎல் பபுளில் இருக்கிறேன்.
எனவே, நான் மனரீதியாக புத்துணர்ச்சி பெற்று என்னை புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஐபிஎல் டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவுதில் நான் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும், அதற்காக துபாயில் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.
எனக்கு ஓய்வளித்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நன்றி. அணி மீதான எனது நம்பிக்கையும் வாழ்த்தும் எப்போதும் இருக்கும். எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வாழ்த்துகிறேன் என கெயில் தெரிவித்ததாக பஞ்சாப் அணி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கெயிலின் முடிவுக்கு அணி மதிப்பளிப்பதாக பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பளே தெரிவித்துள்ளார்.