அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் நட்சத்திர வீரர் திடீர் ஓய்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்
தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மோரிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.
இன்று நான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்!
எனது பயணத்தில் பெரியதாக இருந்தாலும் சரி சிறியதாக இருந்தாலும் சரி, அதில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி.
இது ஒரு அற்புதமான பயணம். அதேசமயம், தென் ஆப்பிரிக்கா franchise அணியான டைட்டன் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என மோரிஸ் அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக 42 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள மோரிஸ், மொத்தம் 468 ரன்கள் அடித்துள்ளார், பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
23 டி20 போட்டிகளில் 133 ரன்கள் எடுத்துள்ள மோரிஸ், பந்து வீச்சில் 34 விக்கெட் எடுத்துள்ளார்.
4 டெஸ்டில் 173 ரன்கள், பந்து வீச்சில் 12 விக்கெட்டுகள் எடுத்தள்ளார். ஐபிஎல் தொடரில் 81 போட்டிகளில் 618 ரன்கள், 95 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் மோரிஸ்.
2021 ஐபிஎல் ஏலத்தில் கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.